கனமழை காரணமாக குடியிருப்பில் தண்ணீர் புகுந்த அவல நிலை ஊராட்சி மன்ற தலைவர் அணில் குமார் உடனடி நடவடிக்கை..
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வலசக்காடு காடு கிராமத்தில் மேற்கு தெரு மற்றும் ஆர்சி தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் தொடர்ந்து இரண்டு நாள் பெய்த கனமழையால் மேற்கு தெரு ஆர் சி தெரு வீடுகளில் தண்ணீர் புகுந்து தங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஆர் சி தெரு பொது மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க ஊராட்சி மன்ற தலைவர் அணில் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மழை நீரை மின் மோட்டார் மூலம் வடிய செய்ததோடு பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் அனைவருக்கும் உணவு மற்றும் தங்குவதற்கான சமுதாயக் கூடத்தில் அனைவரையும் தங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments